அவனும் அவளும்


அவள்: முத்தம் யாதோ?

அவன்:
பேரன்பின்
மென்மையான
பேரழுத்தம்!

அவள்: கன்னத்து குழி எதற்கோ?

அவன்:
அன்பு ஊடல் பிரிவால்
உவர்ந்தோடும் கண்ணீர்
அன்பின் மீள் வருகையால்
களிப்புற்று
உவப்பெனும் உவகைநீராகி
அடுத்து தோன்றிடும்
நாணத்திற்கு செஞ்சாந்து குழைத்திட!

      - வெற்றியன்பன்(Jai's Beloved) பெரமு

04/04/2021 அன்று எழுதப்பட்டது