காட்சி ஒன்று
"செக்கச் சிவந்த - இதழ்
நிறம் எடுத்து
வெட்கிச் சிவந்த - அவள்
கன்னத்து குழிகளில்
குழைத்திட்டது போல்
செம்மண் ராஜபாட்டை !"
உருகத் தொடங்கியது வீரமனம்!
அவள் திசையில் மனசு ஓட
ஓடிய மனதை துரத்தி
இந்த குதிரை ஓட - கிளம்பிய
புழுதி போர்வையில்
தோற்றுப்போன தேசத்தின்
பக்கம் எரிந்த சூரியன்
மறைந்தது ..!
காட்சி இரண்டு
நெற்கதிர்கள் கொஞ்சி
கொஞ்சி சகதியாடும்
நெடு வயல்கள்
பச்சை நிறம் பூசின
கருப்பு விழிகளில் ..!
மாட்டிக் கொண்ட மணிகளை
ஆட்டிக் கொண்டே நடைபோட்ட
காளை கூட்டத்தின் ஒத்திசை
புன்னை வனத்து சோடிக்
குயில்களின் பாட்டிசை - தென்னை
மரத்தின் கூந்தல் திருத்தி குழாவிடும்
பூந்தென்றல் சேர்த்திட்ட மெல்லிசை
யாழும் குழலும் தந்திடாத மந்திர இசை..!
"இயற்கை எழில் என்னும் - இந்த
மாயமெல்லாம் அவளும்தான்
காட்டிடுவாள் அத்தைனையும் ஓரிடத்தில் !"
சோழ தேசத்தில் - சுதந்திரமாய்
திரியும் நாரைகள் ஆண்கள் !
ஒற்றை குளத்தில் நிம்மதியாய்
நீந்திடும் அன்னங்கள் பெண்கள் !
கண்களால் தீராத இன்பம் கொடுத்து
"திரிந்து வா " என்பாள் !
என்னதான் வித்தை இதுவோ ?
திரும்பும் நாள் வரை பொல்லாத
தாகமும் எடுப்பதில்லை !
காட்சி மூன்று
பொன்மகள் நீராடும்
பொன்னி நதிக்கரையில்
நின்று கனைத்தது குதிரை!
அந்த அந்தி நேரத்தின்
ஆரம்ப வேளையில்
நீருக்குள் இருந்து மெல்ல
உதித்தாள் அழகு சந்திரை !
"என் அத்தான் " என
சொல்லத்தான் - போரில்
பெரும் வெற்றித்தான் எனும்
அவன் மார்பைத்தான் - ஆரத்
தழுவத்தான் - துள்ளி
ஓடித்தான் வந்தா ள் !
ஈரம் ஊறிய ஆடை
அவள் கால்களை தடுக்க
தமிழ் மானம் ஏறிய நெஞ்சம்
அவள் வெட்கத்தை பிடுங்க
விலகி ஓடி மறைந்தனள்
ஒளிவு மறைவாய் - மாற்று
துணிகள் இளைப்பாறும்
நிழல் "தரு"வின் பின் புறத்தே ..!
"புண்ணிய நதியில் - பகைவர்
குருதி தோய்ந்த உடலை
நனைப்பதோ ? - என்
பூமகள் நீராடி மணக்கும்
காவிரியை கெடுப்பதோ ?
வயல் சேற்றுக்கு
வாய்க்கால் நீர் பாய்ச்சும்
அந்த தாமரை குளம்
போதுமன்றோ ! - அந்த
குளத்தில் முழுகி நீராடி
குவளை மலர் இரண்டை - நாணி
கவிழும் அவள் விழிகளோடு
ஒப்பிடவே பறித்தெடுத்து
விரைவேன் அவளிடம் ! "
ஓடினான் அங்கு !
காட்சி நான்கு
காய்கின்ற ஈரச் சீலை
கட்டிவைத்த வீட்டுக்குள்ளே