சுரும்பூ


சின்னஞ்சிறு சுரும்பின்
இறகுகளின் விசிறலில்
தாங்கியிருந்த பனித்துளிகள்
காற்றில் தெறிக்க
தானும் படபடத்தன
பூவின் இதழ்கள்! - இப்படி
அழகு சிறையணிந்த - அந்தச் சுரும்பும்
இழகு சிறைக்கொண்டு
காம்பிடை மாட்டிய பூவுக்கு
பறக்கும் ஆவல் மூட்டிக் கொண்டிருந்தது !

                     - பெரமு

10/05/2020 அன்று எழுதப்பட்டது